இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

0
15
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கடன்   பாக்கிகள் தாமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்கள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருக்கவும். கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருக்கவும்.  மாணவர்களுக்கு வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீக்கிப் படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 9

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபாடு வர ஆரோக்கியத்தில் மேம்பாடு கிடைக்கும்

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையிருப்பு இருக்கும். வேளை தவறிச் சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். குரு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் விருத்தியடையும். மகிழ்ச்சியை உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனத்தில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு காரியங்களில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதலாக உழைக்க  வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் கருடாழ்வாரை வழிபட்டு வர நன்மையான பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவதாலும் குருபார்வையாலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒரு சில காரியங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் உடனிருப்பவர்களிடம்  கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிரும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். மாணவர்களுக்குப் பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்திப் படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: தினமும் ஐயப்பனை வழிபட்டு வர  ஆரோக்கியம் மேம்படும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே பாம்பு கிரகங்களில் ஒன்றான ராகுவின் சஞ்சாரம் இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தேங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகக்  காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வார்கள்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாகப் பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்களுக்குக் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு மனக்குழப்பம் தீரும்.  அரசியல்வாதிகள் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4

பரிகாரம்: தினமும் ஆதிபராசக்தியை 11 முறை வலம் வரத் தொழில் மாற்றம் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்தக் காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனின் செவ்வாய் பாதசஞ்சாரம் சின்ன விஷயத்துக்குக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல்  ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். பெண்களுக்கு திடீர் கோபம் உண்டாகலாம். நிதானமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மேலிடம் கனிவாக இருக்கும். மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதன் மூலம் பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். தெளிவான  சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

ராசியில் இருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு. விளையாட்டு, பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலிருக்கும் தேவகுருவால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். வியாபாரத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றிப் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்குக் காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பணிகளுக்குத்  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவி கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: தினமும் ஆண்டாளை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைத்தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையும் பேசவேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், செலவினத்தைச் சந்திப்பார்கள்.

மற்றவருக்காக வீண்பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருக்கவும். பெண்களின் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும். அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அம்மனை வழிபட உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் ஊழியர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்பழி ஏற்படலாம். கலைத்துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனை வழிபட தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பார்ப்பதன் மூலம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணமும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பச் செலவுகள் கூடும்.

குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் போராட வேண்டும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளை

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்: தினமும் காவல் தெய்வத்தை வழிபட நன்மையான பலன்கள் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் தனகாரகன் குருவால் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்துக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்குப் புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்குக் கலைக்காரகன் சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் அருகம்புல் படைத்து விநாயகரை வழிபடத் தடைகள் அனைத்தும் விலகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் அவரின் பார்வையால் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தால் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் புதிய பதவி கிடைக்கும்.

அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.  மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வழிபட மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்.

 

Leave a Reply