எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்: போராட்டம் நீடிப்பால் அதிகாரிகள் திணறல்

0
17
Share on Facebook
Tweet on Twitter

தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம் அகற்றப்பட்ட மதுக்கடைகளுக்கு பதில் புதிய கடைகள் திறக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. அரியலூர்: செந்துறை அடுத்த  நல்லநாயகபுரத்தில் இயங்கி வந்த  டாஸ்மாக் கடையை பொதுமக்கள்   முற்றுகையிட்டனர். அனைத்து மது பாட்டில்களும்  அங்கிருந்து குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டன. கடை நிரந்தரமாக  மூடப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  சென்னிவனம் டாஸ்மாக் கடையை  மூடக்கோரியும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  இன்ஸ்பெக்டர் கருணாநிதி விரைந்து சென்று விற்பனையாளர்களிடம் கடையை  பூட்டச்சொன்னார். கடை பூட்டிய பின் மக்கள் கலைந்து சென்றனர்இரும்புலிக்குறிச்சி  டாஸ்மாக் கடைக்கு மதுபானங்களை இறக்க ஒரு வாகனம் வந்தது. மக்கள்  திரண்டு வந்து, பாட்டில்களை இறக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து அந்த வாகனம்  சென்று விட்டது. பாட்டில்கள் அனைத்தும் விற்றுதீர்ந்ததும் அந்த கடையும்  பூட்டப்பட்டது. தற்போது செந்துறை தாலுகாவில் அனைத்து கடைகளும்  பூட்டப்பட்டுள்ளன. நாகை: நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் இருபுறத்திலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.  கடைகளை அகற்றக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மூடப்படாததால் கிராம பொதுமக்கள், அனைத்து கட்சியினர்   நேற்று கடைகளை முற்றுகையிட்டனர். தாசில்தார் முருகேசன் மற்றும் போலீசார் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என்று கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கரூர்: கார்வழி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆர்.ஐ ரமேஷ், எஸ்ஐ ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெகநாதன்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அரசு மதுக்கடைகளைத் திறக்க அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் புதிய கடைகளைத் திறக்க முடியாமல் திணறி வருகின்றனர்.நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் இருபுறத்திலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.  கடைகளை அகற்றக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மூடப்படாததால் கிராம பொதுமக்கள், அனைத்து கட்சியினர்   நேற்று கடைகளை முற்றுகையிட்டனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1380 கனஅடியாக அதிகரிப்பு
Next articleகல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி பாதிப்பு

Leave a Reply Cancel reply