செங்கத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் உர மூட்டை குடோனாக மாற்றிய அவலம்

0
24
Share on Facebook
Tweet on Twitter

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த தலத்தில் பிரதோஷ வழிபாடு, தமிழ்மாத பிறப்பு, கோபூஜை, சித்திரை வசந்த உற்சவம், ஆருத்ரா தரிசனம், சஷ்டி உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இங்கு மூலவர் சன்னிதானம், அனுபாம்பிகை, பாலமுருகன், வள்ளி தெய்வானை, தட்சணாமூர்த்தி, நவகிரகம் ஆகிய சுவாமி சன்னதிகள், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் மிகப்பெரிய நந்திபகவான் சிலை உள்ளது. இக்கோயிலின் நந்திபகவான் சிலைக்கு அருகே உள்ள கல்மண்டபத்தில் உரம் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், மண்டபத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அந்த மண்டபத்தை குடோனாக மாற்றி ஏராளமான உரமூட்டைகள், பூச்சி மருந்துகளை அடுக்கி வைத்துள்ளார். உரமூட்டைகள், பூச்சி மருந்துகள் அடுக்கி வைத்துள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உர நெடியால் தவிக்கின்றனர். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.பக்தர்கள் தங்கவும், பிரசாத ஸ்டால், புத்தகம், பூக்கடை அர்ச்சனை பொருட்கள் வைத்து விற்க வேண்டிய இடத்தில், முறைகேடாக பூச்சிக்கொல்லி மருந்து, உரம் என கோயில் கல்மண்டபத்தை குடோனாக பயன்படுத்தி வரும் குத்தகைதாரருக்கு ஆதரவாகவும், வணிக நோக்குடனும் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாட உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து குடோனை அகற்றிவிட்டு, குத்தகைதாரரை வெளியேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணல் கொள்ளை செங்கம் நகர், சுற்றுப்புற கிராமப்புற பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் இரவு நேரத்தில் சில சமூகவிரோத கும்பல் டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வருவாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன், மணல் கடத்துபவர்களுக்கு மர்ம ஆசாமிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் கடத்தல்காரர்கள் யாரிடமும் பிடிபடாமல் தப்பிச்சென்றுவிடுகின்றனர். தற்போது பருவமழை முற்றிலும் பொய்த்து, ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. மேலும்  கிணற்றில் நீரின்றி குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் ெபாதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் சமூக விரோதிகளால் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, செங்கம் நகர் மற்றும் கிராம பகுதியில் ஆற்றில் இரவு நேரங்களில் டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் கடத்தலை தடுத்தும், மணல் கடத்தலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleஅதிராம்பட்டினத்தில் பலத்த காற்று: கரையில் ஒதுங்கும் கடற்பாசிகள்
Next articleகுமரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா?

Leave a Reply Cancel reply