2016 பிப்ரவரி மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2016 February Madha Rasipalan

0
327
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
astrology forecast | ராசிபலன்

2016 பிப்ரவரி 1 முதல் 29 வரை

– நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மேஷம்:

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும், 11-ல் கேதுவும்  உலவுவது சிறப்பாகும்.  புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய ஆடை அணிமணிகள் சேரும். அரசு பணிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கு மதிப்பு உயரும்.ஞானமார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும்.

புத்திசாலித்தனம் பளிச்சிடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பிதுராச்சித சொத்துக்கள் கிடைக்கும். 8-ம் தேதி முதல் லாபாதிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். எலக்ட் ரானிக் கம்பயூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். நிர்வாகத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சனைகள் உருவாகும்.   13-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய்    8-ஆமிடம் மாறி சனியுடன் கூடுவதால் விபத்துக்காளாக நேரலாம். எதிலும் அவசரப் படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. ஜல பயம் உண்டாகும். இயந்திரங்கள், எரிப் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தும் போது எச்சரிக்கைத் தேவை. கெட்டவர்களின் தொடர்பு கூடாது. உடன் பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் பிரச்சனைகள் ஏற்படும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது பாதுகாப்பு தேவை. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாக பழகலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சோதனையான நேரமிது. நிலபுல விஷயத்தில் எச்சரிக்கைத் தேவை. சனிப் ப்ரீதி செய்துக் கொள்ளவும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 7, 8, 10, 12, 17, 19, 26, 28. 

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 1, 3, 6, 7. 

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 8-ல் புதனுடன் கூடி இருப்பது சிறப்பாகும். செவ்வாயும் கேதுவும் கூட அனுகூலமாக உலவுகிறார்கள். எதிர்ப்புகளை கடந்து முன்னேற்றம் காண்பீர்கள். மனத் துணிச்சல் கூடும். சாதனைகள் பல ஆற்றுவீர்கள்.

பணவரவு திருப்தி தரும்,. திடீர் பொருள்வரவுக்கு இடமுண்டு. கலைத்துறை ஊக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது திறமை பளிச்சிடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். நல்லவர்களின் நட்புறவால் நலம் பெறுவீர்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மறைந்த, தொலைந்த பொருட்கள் கிடைக்கும். 8-ஆம் தேதி முதல் மக்களாலும் தந்தையாலும் ஓரளவு அனுகூலம் உண்டாகும்.

12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் தான தரும பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபடுவீர்கள். 13-ஆம் தேதி முதல் சூரியன் 10- ஆமிடம் மாறுவதல் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவியிடையே சச்சரவுகள் ஏற்படும். அனுசரித்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பயணத்தின் போதும் இயந்திரங்களில் பணிப் புரியும்போதும் எச்சரிக்கைத் தேவை. பிறரிடம் கோபப்படாமால் சுமுகமாக பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களால் சிறு சிறுப் பிரச்சனைகள் ஏற்படும். ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 7, 8, 10, 12, 17, 19, 26, 28. 

திசை:  வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல்  சனியும் உலவுவது சிறப்பாகும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் நற்பெயரும் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை தெரிய வரும். இரும்பு, எஃகு, எண்ணை வகையறாக்கள், திரவப் பொருட்கள், கச்சாப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பயணம் சார்ந்த இனங்களால் வருவாய் கூடும். புதியவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். 8-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சிக் காணலாம். மாணவர்களது நிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிய முன்வருவார்கள்.

12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவுநிலை சீராஅகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. அரசாங்கத்தாராலும் தந்தையாலும் சங்கடம் உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்நொடிகள் ஏற்படும். வயிறு, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு 3-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களது முன்னேற்றம் பாதிக்கும். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. மக்கள் நலனில் அக்கறைத் தேவை. 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறி வலுப்பெறுவதால் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதகமான திருப்பம் உண்டாகும். நிலபுலங்கள் சேரும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குருவுக்கு ப்ரீதி பரிகாரங்களை செய்துக் கொள்வது நல்லது.

மிருகசீரிஷம், புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 10, 12, 17, 19, 26, 28. 

திசைகள்: மேற்கு, தென்மேற்கு.

எண்கள்: 4, 8.

கடகம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 60ல் புதனும் உலவுவது சிறப்பாகும். குட்ம்பத்தில் குதூகலம் ஊடும். பண வரவு அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். கணிட்ய்ஹம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலபுலங்களால் அளவோடு ஆதாயம் கிடைத்துவரும். 6-ல் சனி உலவுவதால் மக்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அவர்களது நடத்தையில்  கவனம் செலுத்துவது நல்லது. சுக்கிர பலம் இல்லாததால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுப்வாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும். பெண்களால் ஆடவர்களுக்குச் சோதனைகள் சூழும். அவமானப்படவும் நேரலாம். பிற பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வாகனத்தால் அனுகூலமிராது. சுகம் குறையும். கலைத்துறைஒயினருக்கு முன்னேற்றம் தடைப்படும். எதிர்ப்புக்கள் கூடும்.

8-ஆம் தேதி முதல் புதனும், 12-ஆம் தேதி முதல் சுக்கிரனும் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புக்களின் கரம் வலுக்கும். பயணத்தால் சங்கடம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் வளர்ச்சி காணமுடியும். கேளிக்கை, உல்லாசங்க்லளைத் தவிர்ப்பது நல்லது. 13-ஆம் தேதி முடல் சூரியன் 8-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். உடல் நலம் பாதிக்கும்.

தந்தையாலும் அரசாங்கத்தசராலும் பிரச்னைகள் சூழும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவதும் சனியுடன் கூடுவதும் சிறப்பாகாது. என்றாலும் செவ்வாய் தன் சொந்த வீட்டில் உலவும் நிலை அமைவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்புக்கும், கெட்ட பழக்கவாக்கங்களுக்கும் இடம் தரலாகாது.

புனர்பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 10, 12, 17, 19, 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு..

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகள், பந்தயங்கள், வழக்குகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வெற்றிகள் குவியும். பாராட்டுகளும் பரிசுகளும் கூட கிடைக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். மக்களால் நலம் உண்டாகும். நிர்வாகத்திறமையாலும், செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.

8-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதால்  வியாபாரிகள்க்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். 12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதால் சுகம் குறையும். வாழ்க்கைத்துணைவர்டால் சங்கடங்கள் சூழும். கூட்டாளிகளால் சங்கடங்கள் அதிகரிக்கும். சிலர் கூட்டுத் தொழிலை விட்டு விலகவும் நேரலாம். கலைஞர்களுக்குப் பிரச்னைகள் அதிகரிக்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடங்கள் அதிகமாகும். மனைவியின் உடல் நலனில் கவனம் தேவைப்படும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் தகமாகும். விட்டுக் கொடுத்துப்

போவது நல்லது. 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறி, சனிஒயுடன் கூடுவதால் நண்பர்கள், உறவினர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். அனுகு முறையை சரிசெய்து கொள்வதன் மூலமும் கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பைக் காத்துக் கொள்ளலாம். எதிர்ப்புக்களின் கரம் வலுத்திருக்கும் என்பதால் விழிப்புடன் இருப்பது நல்லது.

பூர  நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 17, 19, 26, 28.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 9. 

கன்னி:

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 4-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் கேதுவும் உலவுவது விசேடமாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். சுகானுபவம் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகள் ஆக்கம் தரும். நிலபுலங்கள் ஓரளவுக்கு லாபம் கொண்டுவரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. திறமை பளிச்சிடும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். தொழிலாளர்களது நிலை உயரும்.

விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். 5-ல் சூரியனும், 12-ல் குருவும் ராகுவும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை. அவர்களது முன்னேற்றத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். சிலர் குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்கவும் நேரலாம். கனவுத் தொல்லை உண்டாகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. 8-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. 12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களால் நலம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவதால் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறி சனியுடன் கூடுவதால் மனத்துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். செயலில் வேகம் கூடும்.

உடன்பிறந்தவர்கள் உடஹ்வுவார்கள்.

ஹஸ்தம், சித்திரை  நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 12, 17, 19, 26, 28.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.. 

எண்கள்: 5, 6, 7, 8.

துலாம்:

குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது அனுகூலமான சஞ்சாரத்தால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். நல்லவர்களும் வல்லவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். முயற்சி வீண்போகாது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொன்நிற பொருட்கள் லாபம் தரும். பண வரவு அதிகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்களால் லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயண திட்டம் நிறைவேறும். மக்களால் சிறு சிறுப் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

நண்பர்கள் உறவினர்களால் பிரச்சனைகள் உண்டாகும். 8-ஆம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்கள் வளர்ச்சிக்கான பாதையை காண்பார்கள்.

வாழ்க்கை வசதிகள் பெருகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். 12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் நிலம், மனை, வீடு, வாகன யோகம் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் பெருகும்.  13-ஆம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாக பேசிப் பழகுவது நல்லது. பொருளளாதார நிலையில் நல்ல வளர்ச்சி காணலாம். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவானப் போக்கு தென்படும். கர்ப்பிணிப்

பெண்கள் எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. தாய்வழி உறவினர்களால் நலம் உண்டாகும். கணவரால் மனைவிக்கும், ம்னைவியால் கணவருக்கும் அனுகூலம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.சித்திரை, விசாக  நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள்  கூடும் மாதமிது. ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 12, 19, 26, 28.

திசைகள்:  தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்:   3, 4, 6.

விருச்சிகம்:

சூரியன், புதன்ம, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபக்காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக் காணலாம். செல்வ வளம் பெருகும். மதிப்பு உயரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். கலைஞர்களது லட்சியம் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்களால் சிறு சிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான விழிப்புத் தேவை. 8-ஆம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் முன்னேற்றம் தடைப் படும். மாணவர்களது

வளர்ச்சிக் குறையும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும் போது பாதுகாப்பு அவசியம்.12-ஆம் முதல் சுக்கிரன் 3- ம் இடம் மாறுவது சிறப்பாகும். நல்ல தகவல் கிடைக்கும், முக்கியமான ஓரிரு ஆசைகள் நிறைவேறும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். உடல் சோரிவு ஏற்படும். சொத்து சம்பந்தமான காரியங் களில் விழிப்புத் தேவை. 20-ஆம்  தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உடல் நலம் சீராகும். மதிப்புக்கும் அந்தஸ்த்துக்கும் குறைவிராது. தலை சம்பந்தமான

உபாதைகள் சிலருக்கு ஏற்படும். ஜல பயம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்பக்களைச் சரிவர ஆற்றி வருவது நல்லது. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். கெட்டவர்களின் சகவாசத்தை விட்டு விலகுவது அவசியம்மாகும். அதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமால் தப்பலாம். எதிலும் பதற்றப்ப்டாமல் யோசித்து ஈடுபடுவது நல்லது. பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை.

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 12, 26, 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு வடக்கு, கிழக்கு.  .

எண்கள்: 1, 4, 5, 6. 

தனுசு:

செவ்வாய், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சசாரம் சிறப்பாக இருப்பதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருந்து வரும். பண நடமாட்டம் திருப்திகரமாகவே இருக்கும்.அதிரிஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். சுபக் காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூர பயணம் பயன் தரும். ஆன்மீக வாதிகள் அறநிலையப் பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம்மான சூழ்நிலை நிலவி வரும்.  மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சிக் காணலாம். மாணவர்களது நிலை உயரும். கணவடன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

தொழில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் கைக்கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். சொற்பொழிவாளர்கள்,அரசியல்வாதிகள், கல்வித் துறைகளைச் சார்ந்தவர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். 12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் செல்வ வளம் மேலும் பெருகும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கடன் உபத்திரவம் குறையும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருள் காணாமல் போகும் எச்சரிக்கைத் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். இளைய சகோதர சகோதரிகளால் மன வருத்தம் உண்டாகும். இயந்திரப் பணியாளர்கள், விவசாயிகள், சுரங்கபப் பணியாளர்கள் ஆகியோர் எச்சரிக்கையுடன் செயல் பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். சனிப் ப்ரீதி செய்துக் கொள்வது அவசியமாகும்.

பூராட  நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 7, 8, 10, 12, 17, 19(பகல்), 26, 28.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு. .

எண்கள்: 3, 6, 7, 9.

மகரம்:

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் உலவுவது விசேடமாகும். 10-ல் உலவும் செவ்வாயும், 12-ல் உலவும் சுக்கிரனும் கூட நலம் புரிவார்கள்.உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய பயணைப் பெற்று வருவீர்கள். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். சமுதாய நலப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்புக் கூடும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவது அவசியமாகும்.

சூரிய பலம் குறைந்திருப்பதால் உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படம் அரசுப் பணிகளில் எச்சரிக்கைத் தேவை. நிர்வாகத் துறையினருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். 2-ல் கேதுவும் 8-ல் குருவும், ராகுவும் உலவுவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் அமைதிக் காண அரும்பாடு பட வேண்டி வரும். பேச்சில் சூடான வார்த்தைகள் உதிர்க்கலாகாது. பயணத்தால் சங்கடம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செயல் படுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது.

வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் கடமைகளை சரிவர ஆற்றி வருவது அவசியமாகும். பயணம் சார்ந்த இனங்களில் அதிக கவனம் தேவை. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். குருவுக்கும் ராகு கேதுவுக்கும் ப்ரீதி பரிகாரங்களை செய்துக் கொள்ளவும்.

திருவோணம், அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 12, 17, 19, 26, 28.

திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 8, 9.

கும்பம்:

புதன், குரு, சுக்கிரன் சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடி வரும். திருமணம் போன்ற சுபக் காரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சிக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். நல்லவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். விருந்து உபச்சாரங்களில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்கள் வளர்ச்சிக் காண்பார்கள். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைப் போடுவார்கள். பெண்க்ளுக்கு மன உற்சாகம் பெருகும். சொத்துக்களும் ஆடை அணிமணிகளும் சேரும். 8-அம் தேதி முதல் புதன் 12-ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் முழுகவனம் தேவை. 12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கூடி வரும். தருமப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

13-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவதால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.20-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆம் இடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அதிருப்தி காணலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். தொழில் முன்னேற்ற திட்டங்கள் கைக்கூடும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.  நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்து வரும். உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். தந்தை நலனில் அக்கறைத் தேவைப் படும். அரசியல்வாதிகள் விழிப்புடன் செயல் படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மக்கள் நல முன்னேற்றத்திற்காக சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும்.

அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 10, 12, 17, 19, 28.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 5, 6, 8.

மீனம்:

சூரியன், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு செழிப்பான பாதைத் தெரிய வரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குருபலம் குறைந்திருப்பதால் சுபக் காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். பொருளாதார பிரச்சனை ஏற்படும். கடன் தொல்லை சிலருக்கு உண்டாகும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சனைகள் கூடும். செவ்வாய் 8-ல் இருப்பதால் சகோதர நலம் பாதிக்கும். வீண் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. 8-ஆம் தேதி முதல் புதன் 11-ஆம் இடம் மாறுவதால் எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீனத் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும்.

12-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிக் காணலாம். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 12- ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. கால் பாதம், இதயம், கண் உபாதைகள் ஏற்படும். 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் அவர் சொந்த வீட்டில் உலவுவதால் தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்சனைகள் ஏற்படும். அரசு அபராதம் கட்ட நேரலாம். பிதுராச்சிதப் பொருட்களைப் பெறுவதர்க்கு குறுக்கீடுகள் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குருப் ப்ரீதி செய்துக் கொள்ளவும்.

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் சற்று கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 3, 7, 8, 10, 12, 17, 19, 26.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு

எண்கள்: 1, 4, 5.

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here