Home Tamil Astrology Tamil Month Rasipalan Aippasi Madha Rasipalan | ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2017 முதல் 16-11-2017 வரை

Aippasi Madha Rasipalan | ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2017 முதல் 16-11-2017 வரை

0
16
astrology forecast | ராசிபலன்

அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லும் மேஷ ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அதிபதியாவார். 8-ம் இடத்திற்கு அதிபதி 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல வாய்ப்புகள் நாடிவரும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த ஒரு காரியம், இப்பொழுது தானாக முடிவடையப் போகிறது.

முயற்சி எடுக்காமலேயே பல காரியங்கள் முடிவடையும் நேரம் இது. குறிப்பாக எதிர்ப்பு, வியாதி, கடன் என்று வர்ணிக்கப்படும் இடமான 6-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், எதிரிகள் விலகுவார்கள். வியாபாரப் போட்டிகள் அகலும்.

உங்களோடு கூட்டுத்தொழில் செய்பவர்கள், விலகிக்கொள்ளலாம் என்று இதுவரை நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டு உங்களுடனேயே தொழில் செய்வார்கள். அடிக்கடி ஆரோக்கியப் பாதிப்புகளில் சிக்கித் தவித்த நீங்கள், இனி அனுதினமும் உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள்.

என்னதான் நமது முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அதை வெற்றிபெறச் செய்ய இறையருளும் தேவை. அந்த இறையருளை முறையாக நீங்கள் பெற, உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். அதில் செவ்வாய், சனி, ராகு-கேதுக்களின் தசாபுத்திகள் நடைபெற்றால், விரயங்கள் கூடுதலாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இதுபோன்ற நிலை மாறுவதற்காகத்தான் பரிகாரங்கள் செய்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழிலில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது இடம், பூமி வாங்குவதற்காகவோ வங்கியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு, வங்கியில் இருந்து பணம் வந்து சேரக்கூடும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது ஓரளவு குறைந்திருக்கிறது. என்றாலும் அது விலகும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பதே நல்லது. டிசம்பர் 19-ந் தேதி சனி விலகப் போகிறது. அதுவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். அனுமன் வழிபாடு அல்லல்களைப் போக்கும். மாதத் தொடக்கத்தில் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட வண்ணத்தில் ஆடை எடுத்து, குடும்பப் பெரியவர்களின் ஆசியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டு ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், வியாழக்கிழமை தோறும் குருவை வழிபட்டு வந்தால் வெற்றிகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.

விருச்சிக புதன் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,6-க்கு அதிபதியான புதன், அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாகும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள்.

சுக்ர பெயர்ச்சிக் காலம்

இதுவரை கன்னி ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்ரன், துலாம் ராசிக்கு நவம்பர் 3-ந் தேதி வருகிறார். துலாம் ராசி, சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கும், 2-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கும்பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடல் தாண்டிச் செல்லும் முயற்சியும் அனுகூலமாக அமையும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாத செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. சஷ்டி விரதமிருப்பதன் மூலம் சகல பாக்கியங்களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 25,26,30,31 நவம்பர்: 5,6,10,11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும் மாதம் இது. உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். பெற்றோர்களின் பாசம் கூடுதலாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படும். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

உழைத்தால் உயர்வு கிடைக்கும் என்று சொல்லும் ரிஷப ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு சந்திரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து சந்திர- மங்கள யோகத்தை உருவாக்குகிறார்கள். எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை ஓரளவு குறையும். குடும்பத்தினரின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஒரு பெரும் தொகையைச் செலவிடும் சூழ்நிலை மாதத் தொடக்கத்திலேயே உருவாகும்.

உடன்பிறப்புகளோடு கூட்டுத் தொழில் வைத்திருப்போர், அதிலிருந்து விடுபட நேரிடும். உடன் பிறப்புகள் தம் பங்கைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவர். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள போதுமான தொகை இல்லையே என்ற சொத்துகளை விற்கக்கூடிய சூழ்நிலை கூட ஒருசிலருக்கு ஏற்படலாம்.

குரு பகவான் 6-ல் சஞ்சரிக்கிறார். ‘6-ல் குரு வந்தால் ஊரில் பகை உருவாகும்’ என்பார்கள். எனவே அடுத்த வீடு, பக்கத்து வீட்டாருடன் இல்லாமல் அண்டி வந்தவர் களுடனும் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் குருவினுடைய பார்வை உங்களுடைய ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான இரண்டாம் இடத்திலும் பதிகிறது. எனவே வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும். குழப்பங்கள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேங்கிய காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். சில்லறை கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும்.

வெளிநாட்டிற்குச் சென்று உத்தியோகம் பார்க்க ஆசைப்பட்டவர்கள், அதற்காக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அது கைகூடும் நேரம் இது. சனியின் ஆதிக்கம் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கிறது. சப்தம ஸ்தானத்தில் சனி உலா வரும்பொழுது எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. முதல் முயற்சி உங்களுக்கு பலன் தராவிட்டாலும், அடுத்த முயற்சி நல்ல பலனைத் தரும்.

இம்மாதம் தொடக்க நாளிலேயே தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் அதிர்ஷ்டம் தரும் ஆடைகளை அணிந்து கொண்டு, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பிறகு தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள். வியாழக்கிழமை தோறும் குருவையும், வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளையும் வழிபடுங்கள்.

வெற்றியை வழங்கும் விருச்சிக புதன்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது, சகல நன்மைகளையும் வழங்குவார். குறிப்பாக பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். வங்கிச் சேமிப்பு உயரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல வரன்கள் வாசல் தேடிவரப் போகிறது.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். இதுவரை சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்றிருந்தார். இப்பொழுது சொந்த வீட்டிற்கு வந்து பலம் பெறுகிறார். எனவே இனி உடல்நிலைத் தொல்லைகள் அகலும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். தங்கம், வெள்ளி, ஆடை-ஆபரண சேர்க்கை உண்டு. பெண்வழிப் பிரச்சினை கள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு காண்பீர்கள். சுக்ர பலம் நன்றாக இருக் கும் பொழுது, அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். எனவே இதுபோன்ற காலங்களில் தொழில் தொடர்பாக முயற்சிகளை எடுப்பது பலனைத் தரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நேரம் இது.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 28,29, நவம்பர்: 1,2,8,9,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும் மாதம் இது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க, முக்கியப்புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரயங்கள் கூடுதலாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வீடு மாற்றங்கள் உங்களுக்கு விரும்பும் விதத்தில் அமையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. அனுமன் வழிபாடும், பெருமாள், லட்சுமி வழிபாடும் பெருமை சேர்க்கும்.

சமயோசிதமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு குருவும் சேர்ந்திருக்கிறார். சூரியன் நீச்சம் பெற்று விளங்குவதால் நீச்சபங்க ராஜயோக அமைப்பு உருவாகிறது.

மாதத் தொடக்கத்தில் பஞ்சம விரயாதிபதியான சுக்ரனும் நீச்சம் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட கிரகங்களை வைத்து பார்க்கின்ற பொழுது, சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர் கால நலன் கருதி, ஏதேனும் திட்டங்களை நீங்கள் தீட்டியிருந்தால் அவை வெற்றி பெறும்.

தனாதிபதி சந்திரன் 4-ல் சஞ்சரிப்பதாலும், தன ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. என்றாலும் ஒருசில சமயங்களில் செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில் நிமித்தமாக ஒரு சிலருக்கு கடன் சுமை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த வங்கிகளை நாடியவர் களுக்கு, வங்கிப் பணம் கிடைக்கலாம். துலாம் ராசிக்குப் பெயர்ச்சியான குரு, இப்பொழுது கொஞ்சம் வலிமை இழந்திருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமையிழக்கும் பொழுது, யோகத்தைச் செய்யும் என்பார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குரு பார்வை இப்பொழுது உங்களுக்கு நன்மையைச் செய்யும் என்றே சொல்லலாம். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெறும். பத்திரப் பதிவுகளில் இருந்த தடைகள் விலகும். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே, பழைய கட்டிடங்களைப் பழுதுபார்க்க வாய்ப்பு கள் கைகூடவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்கப் போகின்றது.

சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது என்பதால், நாளும் பொழுதும் நல்ல விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றைப் பரிசீலனை செய்து பட்டியிலிட்டு வைத்துக்கொண்டு, பிள்ளைகளின் வெளிநாட்டு யோகம் முதல் கல்யாண காரியங்கள் வரை அத்தியாவசியத் தேவைகளையெல்லாம் அடுக்கடுக்காகச் செய்துமுடிப்பீர்கள். குருவினுடைய பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

இம்மாதம் கந்தசஷ்டி விழா வருகிறது. பொதுவாக உங்கள் ராசிக்கு 6,11-க்கு அதிபதியானவர் செவ்வாய். அந்த செவ்வாய்க்குரிய முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வேண்டிய நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாயப்புகளை வரவழைத்துக் கொடுப்பது வழிபாடுகள்தான் என்பதை அனுபவத்தில் தான் உணரமுடியும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் வரப் போகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உங்களுக்கு கிடைக்கும். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி விற்பனையில் இதுவரை இருந்த தடைகள் அகலும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஒருசிலருக்கு வந்து சேரும். பழைய உத்தியோகத்தி லிருந்து விடுபட்டு புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் அவர் இதுவரை நீச்சம் பெற்று வலிமையடைந்து கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குத் தனது சொந்த வீட்டிற்கு வருகின்றார். இது ஒரு அற்புதமான நேரமாகும் பாக்ய ஸ்தானத்தில் பாக்யாதிபதி வலிமை பெற்றிருக்கும். இந்த நேரத்தில் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களில்இருந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாதம் புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதன் மூலம் சங்கடங்களில் இருந்து விடுபட இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,29,30 நவம்பர்: 3,4,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு, மிகச்சிறந்த நற்பலன்கள் கிடைக்கும். காரணம் குரு பார்வையும் இருக்கிறது; தன ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். சிக்கல்கள் விலகும், சிரமங்கள் குறையும். தக்க சமயத்தில் தாய் வழி ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப் படும். கைநிறையச் சம்பளம் வாங்கும் யோகமும், பதவி உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். 8-ல் கேது இருப்பதால் சர்ப்ப தோஷமும் இருக்கிறது. எனவே நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்வது நல்லது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு கீர்த்தியை வழங்கும்.

பொதுநலத்தில் புகழ்குவிக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வீற்றிருக்கிறார்கள். பாம்பு கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதால், வரவும் செலவும் சமமாகவே இருக்கும். வாய்ப்புகளில் ஒன்றிரண்டு கைநழுவிப் போகலாம். முயற்சியின் பெயரிலேயே சில காரியங்கள் முடிவடையும். இருந்தாலும் நீங்கள் தளர்ச்சியடைய வேண்டாம். சுய ஜாதகத்தின் அடிப்படையில் தசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவதோடு, ராகு-கேது பிரீதி செய்வது தடைகளை விலக்கும்.

மாதத் தொடக்கத்தில் சந்திரன் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அவரோடு யோகம் தரும் செவ்வாயும் இணைந்திருக்கிறார். சுக்ரன் நீச்சம் பெற்றிருப்பதும் ஒரு வகைக்கு நன்மைதான். இப்படிப்பட்ட கிரக நிலைகளின் விளைவாக தொழில் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் சுமையைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், ஆரோக்கியத் தொல்லைகள் வந்து போகும். இதுபோன்ற காலங்களில் நோய்க்கான அறிகுறி தென்படும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனியின் பலம் நன்றாக இருக்கிறது. பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணிய பலன்கள் நிறைய வந்து சேரும். குறிப்பாக பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பரம்பரை கோவில் திருப்பணியை, குதூகலமாக முன்னின்று நடத்த வாய்ப்புகள் கைகூடிவரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சியால் பலன் உண்டாகும்.

பெண் பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகளைக் கருதியும், கல்வி நலன் கருதியும் செய்த முயற்சி கை கூடும். திருமணச் சீர்வரிசைக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

இம்மாதத் தொடக்கத்தில் வரும் தீபாவளித் திரு நாளான்று, உங்களுக்கு யோகம் தரும் வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கொண்டு ஆலயங்களுக்குச் சென்று, சிவன், விஷ்ணுவை வழிபடுங்கள். நாகத்தை அணிந்த பெண் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதும் நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வரப்போகிறார். உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானதி பதியாக விளங்கும் புதன், புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் சகாயங்கள் கிடைக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நம்பிக்கை தருவதாக அமையும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பில் சிறிது கரைந்தாலும் அது நல்ல செலவாகவே இருக்கும்.

துலாத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன்

இதுவரை சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வந்தார். இப்பொழுது நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த வீடு சுக்ரனுக்குச் சொந்த வீடாகும். எனவே சுக ஸ்தானம் பலப்படுகிறது. ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். வெளிநாடு சென்று பணிபுரிய இதுவரை அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு, இப்பொழுது அதற்கான உத்தரவாதம் கிடைக்கும்.

இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பெற்றோர்களின் மணி விழா, முத்து விழா, பவள விழாக்களை நடத்திப் பார்க்கும் நேரம் இது. சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும். தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட பூமி, இப் பொழுது நல்ல விலைக்கு விற்பனையாகி, கைகளில் பணம் புரளும். நிலத்தால் வந்த பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பங்காளிப் பகை மாறும். நாட்டுப்பற்று மிக்கவர்கள், நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,21 நவம்பர்: 1,2,5,6,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு நல்ல பலன்களைக் காண்பீர்கள். கணவன்-மனைவி உறவு திருப்தி தரும். பிள்ளைகளின் நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஊதிய உயர்வு மட்டுமல்லாமல், வரவேண்டிய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். குரு கொஞ்சம் வலிமை இழந்திருப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழி படுங்கள். அதோடு குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும்.

நினைத்ததை நினைத்தவுடன் முடிக்க எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு குரு பகவான் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் செயல்படுகிறது. என்றாலும் சூரிய பலம் குறைவதால் ஆரோக் கியத் தொல்லை அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழி அகல, நீங்கள் எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை திருப்தி தரும் என்றாலும், செலவு கூடுதலாகவே இருக்கும். எதையும் சமாளித்து பழக்கப்பட்டவர்கள் நீங்கள் என்பதால், குடும்பச் சுமையையும் சமாளிப்பீர்கள். கொள்கைப் பிடிப்பை ஒருசில சமயங்களில் தளர்த்திக் கொள்ள நேரிடும்.

புத- ஆதித்ய யோகம் இருப்பதால், கல்வி மற்றும் கலைத்துறை சம்பந்தமாக ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அது அனுகூலமாகும். மேல்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது தொழில் படிப்பு சம்பந்தமாகவோ செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரம் இது.

ஜீவன ஸ்தானத்தில் கேது இருந்தாலும், ஸ்தானாதிபதி சனி சுக ஸ்தானத்தில் வீற்றிருப்பதோடு, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்கவும், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறவும் ராகு-கேதுக்களுக்குரிய ஸ்தல வழிபாடுகளையும், சிறப்புப் பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

2-ல் செவ்வாய் இருப்பது ஒரு வகைக்கு நன்மைதான். யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானம் திருப்திகரமாக வந்து கொண்டே யிருக்கும். பல வருடங்களாக விற்பனையாகாமல் இருந்த சொத்துகள், இப்பொழுது நல்ல விலைக்கு விற்பதற்கான அறிகுறி தோன்றும். அதன்மூலம் வரும் தொகையைக் கொண்டு வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வீடு மாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் என்று பலவித மாற்றங்கள் தேடிவரும் நேரம் இது. வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். ஒரு சிலருக்கு மாற்றங்களால் ஏற்றங்கள் ஏற்படலாம்.

இம்மாதம் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் கண்ணபிரான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்குச் செல்லும் இந்த வேளை இனிய வேளையாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இதுவரை இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறக்கூடிய நேரம் இது. கடந்த காலத்தில் ஏற்பட்ட சோதனைகளும், வேதனைகளும் மாறும். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டு. பெற்றோர் வழி ஆதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சுகஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் இதுவரை நீச்சம்பெற்று கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது அவர் பலம்பெற்று சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகும். உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகள் ஓடிவந்து ஒட்டிக்கொள்வர். மளமளவெனக் காரியங்கள் நடக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு, அதிகாரத்துவ யோகம் வந்து சேரும். இதுவரை பகை பாராட்டிய மேலதிகாரிகள் இப்பொழுது உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆதியந்தப்பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவதால் செல்வ நிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,22,23, நவம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு, சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நேசம் மிகுந்த உறவினர் களால் நல்ல காரியம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். செய்து வரும் தொழிலை மாற்றலாமா? என்று யோசிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் சண்டைச் சச்சரவுகள் விலகும். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்ளுங்கள். குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்லி முறையிடக் கூடாது. பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.

மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் கன்னி ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வாக்கு, தனம், குடும்பம் என்பன போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கும் இடமான 2-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால், வாக்கு மேன்மை, வளர்ச்சி, திருமணத்தடை அகலுதல், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், சொந்த பந்தங்களால் நன்மை போன்றவற்றை எல்லாம் கொடுக்கும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன.

அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடம் எனப் படும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன் தன ஸ்தானத்தில் இம்மாதம் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். நல்ல மனம் படைத்த உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்புகள் கைகூடிவரும்.

அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். ஆபரணங்கள் வாங்குவதற்காக ஒரு பெரும் தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் தானாகவே வந்து சேரும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க முயற்சியோடு நின்றுவிடாமல், முழு முதற்கடவுகளையும் வழிபடுவது நல்லது. சுயஜாதகத்தில் தசாபுத்தி பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நற் பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.

பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளால், வாழக்கையில் சில பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடக்கமாட்டார்கள். இது போன்ற நிலை மாற சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

வாரம் தோறும் புதன்கிழமைகளில் வெற்றிலை மாலையை அணிவித்து விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். கட்டாயம் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பார் அனுமன். சஷ்டி விரதமிருந்து முருகப்பெரு மானையும் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே தொழிலில் நல்ல மாற்றங்கள் உருவாகும். புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு பொருளாதார நிலை உயர வழி வகுத்துக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் மட்டுமல்லாமல் தொழில் மாற்றங்களைக் கூட ஒருசிலர் செய்ய முன்வரும் நேரமிது. வெளிநாட்டு யோகம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். தசாபுத்தி பலம்பெற்றவர்கள் திடீர் முன்னேற்றம் காணும் நேரமிது.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

நவக்கிரகங்களில் அள்ளிக் காடுக்கும் ஆற்றலைப் பெற்றவர் சுக்ரன். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். துலாம் ராசி சுக்ரனுக்கு சொந்த வீடாகும். அங்கு ஏற்கனவே சஞ்சரித்து வந்த குருவோடு பகை கிரகமாக விளங்கும் சுக்ரன் சேர்வதால் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களைச் செய்து கொடுப்பர். பெரிய அளவில் முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

இம்மாதம் ஆதியந்தப்பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து துர்க்கையை வழிபடுவதும் உகந்தது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

அக்டோபர்: 20,21,25,26 நவம்பர்: 5,6,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்

மங்கையர்களுக்கான பலன்கள்!

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு எண்ணிய காரியம் எளிதில் நடைபெறும். எதிர்பார்த்தபடி தொகை கைக்கு கிடைக்கும். புது முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கல்யாணம் போன்ற சுபமுகூர்த்தங்கள் இல்லத்தில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றை மாதத்தின் பிற்பகுதியில் வாங்கி மகிழ்வீர்கள். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறப்புகளை மட்டும் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். லட்சுமி கவசம் பாடி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்.

துவளாத மனமும் தொண்டாற்றும் உள்ளமும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிற பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சுக்ரன் பலமிழந்து நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு தனாதிபதி செவ்வாயும், தொழில் ஸ்தானாதிபதி சந்திரனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசியிலேயே குருபகவான் சஞ்சரிக்கிறார். அவரோடு நீச்சம் பெற்ற சூரியனும், அஸ்தங்கம் பெற்ற புதனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். ஏழரைச் சனி இன்னும் சில மாதங்கள் நடைபெறும் விதத்தில் இருக்கிறது. எனவே நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும் என்றே சொல்லலாம்.

ஒருநாள் வரவு ஒருநாள் செலவு என்ற நிலை உருவாகும். உள்ளத்தில் அமைதி குறையும். விரய ஸ்தானத்தில் தன ஸ்தானாதிபதி இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். பொதுவாக அதிக விரயங்களைக் கொடுக்கும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்குமேயானால் நம் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. வீடு பழுது பாாக்கும் அமைப்பில் இருப்பவர்கள், அந்தப் பணியை நிறைவேற்றலாம். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஏதேனும் திட்டங்கள் தீட்டியிருந்தால் அதற்காகவும் ஒரு தொகையை விரயம் செய்யலாம்.

பூமி காரகன் என்று அழைக்கப்படுபவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் வரும்பொழுது ஒருசிலருக்கு பூமி விற்பனையும், தன லாபமும் கிடைக்கும். பல வருடங்களாகப் பேசி, பேசி விட்டுப் போன சொத்துகள், இப்பொழுது விற்பனையாவதற்கான அறிகுறிகள் தென்படும். அங்ஙனம் விற்பனையாகும்பொழுது கைக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு, வேறு ஒரு சொத்தை விலைக்கு வாங்கும் யோகமும் உண்டு.

உடன்பிறப்புகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையும், அவர்களுக்கு ஏற்படும் வருத்தத்திற்கு வடிகாலாக ஏதேனும் ஒரு தொகையைச் செலவு செய்யும் சூழ்நிலையும் ஏற்டலாம். பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய மாதமாகவே இந்த மாதத்தைக் கருதலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டு ஜோடி தீபம் ஏற்றுங்கள். அதன்பிறகு ஏழரைச் சனி நடப்பதால் சனியின் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டையும் முறையாக மேற்கொள்ளுங்கள். வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இங்ஙனம் விரயாதிபதியாக விளங்கும் புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயத்திற்கு ஏற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும், நூதனப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், அதைச் செயல்படுத்த முன்வருவீர்கள். காரியத்தை தொடங்கிவிட்டால் காசு, பணம் தானாக வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குள் சுக்ரன் வரப்போகிறார். இதுவரை நீச்சம் பெற்றிருந்த உங்கள் ராசிநாதன் சுக்ரன் இப்பொழுது உங்கள் ராசியிலேயே சஞ்சரித்துப் பலம்பெறுகிறார். சுக்ரனுக்குச் சொந்த வீடாக உங்கள் ராசி அமைகிறது. எனவே இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர் களும் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சஷ்டியில் விரதமிருந்து சண்முகநாதரை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 22,23,28,29 நவம்பர்: 7,8,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் விரயங்கள் அதிகரிக்கும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் மாதம் இது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பிற்பகுதியில் குடும்ப ஒற்றுமை கூடும். மூன்றாம் நபரின் தலையீட்டால் வந்த முக்கியப் பிரச்சினைகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளின் சுபச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் யோகம் வரை அனைத்து யோகங் களும் படிப்படியாகச் செயல்படும். செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலையில் உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஒப்பந்தங்களில் கை யெழுத்திட்டு மகிழ்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் அருகில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், விரைவில் சனி விலகப் போவதால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடல்நலம் சீராகி உற்சாகத்தைக் கொடுக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உடலில் தெம்பும் பெற்று செயலாற்றுவீர்கள். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்புச் செய்வர்.

குரு பகவான் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் வலிமையிழந்தும் இருக்கிறார். தன பஞ்சமாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். வாகன ஸ்தானம், சுக ஸ்தானம், கல்வி மற்றும் தாய் ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் சுகங்களும், சந்தோஷங் களும் கூடும். சுற்றியிருப்பவர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றை செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.

பழைய வாகனங்களால் பழுதுச் செலவு அதிகரிக் கிறதே என்று கவலைப்பட்டவர்கள், அதை விலைக்கு கொடுத்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். திசாபுத்தி பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு தாய் நாட்டிலேயே சுய தொழில் புரியும் வாய்ப்பு கைகூடிவரும்.

இம்மாதத் தொடக்கத்தில் வரும் தீபாவளித் திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வண்ணத்தில் ஆடை களைத் தேர்ந்தெடுத்து, அதில் மஞ்சள் தடவி குடும்பப் பெரியவர்களின் ஆசியோடு அணிந்து கொள்ளுங்கள். அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபடுவதோடு சிவாலய வழிபாடும், விஷ்ணு ஆலய வழிபாடும், கண்ணபிரான் வழிபாடும் சிறப்பான வாழ்வைத் தரும். மாதத் தொடக்க நாளில் நீங்கள் செய்யும் வழிபாடு மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.

விருப்பங்களை நிறைவேற்றும் விருச்சிக புதன்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதி உங்கள் ராசிக்கு வரும்பொழுது தொழிலில் வருமானம் உயரும். வங்கிச் சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க ஆர்வம் பிறக்கும். தொழில் தொடர்பாக புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழைய பங்குதாரர்களோடு இருந்த பகை மாறும். புதிய பங்கு தாரர்களும் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குள் சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் வசதிகள் பெருகும். வாகன யோகம் உருவாகும். கூடுதலாக விரயம் செய்து, தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவம் செலுத்துவீர்கள்.

இம்மாதம் சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,25,26,27,30,31 நவம்பர்: 8,9,10,14,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இம்மாதம் ஒரு இனிய மாதமாகும். உடல்நலம் சீராகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கச் செய்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்களுக்குத் தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ஜென்மச் சனிக்கு பரி காரமாக சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்களான தனுசு ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயரும். செய்ய நினைத்த காரியங்களை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் சந்திரன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இருப்பதால், தொழில் முன்னேற்றம் கருதிப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

தொழிலை விரிவுபடுத்துவதற்குப் போதுமான மூல தனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அஷ்டமாதிபதி சந்திரன் 10-ல் சஞ்சரித்து மாதம் தொடங்குவதால், உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு இடமாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்து சேரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 19-ந் தேதி வரை விரயச்சனி உள்ளது. அதன்பிறகு ஜென்மச் சனி நடைபெறும்.

இதற்கிடையில் 12-ம் இடமான பயண ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். நேரா நேரத்திற்கு சாப்பாடு தயாராக இருந்தும் அதைச் சாப்பிட முடியாதபடி தொழில் ரீதியாகப் பயணங்கள் அதிகரிக்கும். ஒருசில சமயங்களில் மனப்பயம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, தனியாக தொழில் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினமாகும். விரயச் சனியின் ஆதிக்க காலம் என்பதால், மிகுந்த பொறுமை தேவை. விரோதங்கள் அதிகரிக்கும். வீண்பழிகள் உருவாகும். அதிலிருந்து விடுபட சனி கவசம்பாடி சனிக் கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேது, 8-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கிறார்கள். வாக்கு, தனம், குடும்பம் என்பதை அறியும் 2-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. ராகு-கேதுக்களுக்குரிய பிரீதியை முறை யாகச் செய்வது நல்லது. ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கும். கூட்டாளிகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். இருப்பினும் ஆற்றல் மிக்கவர்களின் அனுசரிப்பு இருப்பதால் நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. சூரியன் நீச்சம் பெற்றிருப்பதால் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை இனம் கண்டுகொள்வது நல்லது.

வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதோடு, யோக பலம் பெற்ற நாளில் தெய்வங்கள் போராடி வெற்றிபெற்ற ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். 7,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 12-ல் சஞ்சரிப்பது நன்மைதான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தூர தேசம் தொடர்பாக எடுத்த முயற்சியில், நல்ல தகவல் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளுக்காக நீங்கள் வைத்த பஞ்சாயத்துகள் இதுவரை பலன் இழந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது வழக்குகள் சாதகமாகி உங்களுக்கு வரவேண்டிய பங்குத் தொகை வந்து சேரும். வீடு மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கைகூடும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். இது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். லாப ஸ்தானத்திற்கு வரும் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் வாரிசுகளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஆர்வம் காட்டலாம். திருமண சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

இம்மாதம் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபடுவது நல்லது. சதுர்த்தி திதியில் ஆனை முகப்பெருமானுக்கும், சஷ்டி திதியில் ஆறுமுகப்பெரு மானுக்கும் விரதமிருந்து வழிபட்டு வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,321,28,29 நவம்பர்: 1,2,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் மாதம் இது. வாங்கல்- கொடுக்கல் களில் கவனம் தேவை. ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையச் சனி கவசம் பாடிச் சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது. கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது. பிள்ளைகளை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உடன்பிறப்புகளால் உங்களுக்கு நன்மை உண்டு. தாய்வழி ஆதரவும் ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடி வாங்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும்.

நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் மகர ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை உருவாகும். பணப் பற்றாக்குறை அகலும். அதே நேரத்தில் ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பிறர் மனம் புண்படும்படி பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவீர்கள்.

ஏழில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணையோடும், வாரிசுகளோடும், குடும்ப உறுப்பினர்களோடும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு அகலும். ஒருசில சமயங்களில் உங்கள் கொள்கைப்பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள நேரிடும். என்னயிருந்தாலும் சனியின் பார்வை உங்களுக்கு ராசியில் பதிவதால் இனம்புரியாத கவலை உருவாகும். எந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அந்த நேரத்தில் செய்ய இயலாவிட்டாலும் தாமதம் ஏற்பட்டாவது செய்து முடித்து விடுவீர்கள்.

அஷ்டமாதிபதி சூரியன் வலிமை இழந்திருக்கும் இந்த நேரத்தில், சில நல்ல காரியங்கள் நடைபெறும். குறிப்பாக பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். இதுவரை பகை பாராட்டி விலகியிருந்த உறவினர்கள் இப்பொழுது தானே வந்து சேருவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் நல்ல பொறுப்புகள் வந்து சேரும். குருவினுடைய பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும். வெளியில் கடன் வாங்க வேண்டாம் நாங்களே தருகிறோம் என்று பெற்றோர்கள் எடுத்துரைப்பர்.

6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். மேலிடத்து நிர்ப்பந்தத்தின் காரணமாக பதவி மாற்றங்களைச் சந்தித்திருந்த நீங்கள், இப்பொழுது உத்தியோக உயர்வு காண வழிகிடைக்கப் போகிறது. இருக்கும் வேலையிலேயே கூடுதல் பொறுப்பு ஒருசிலருக்கு வந்து சேரும். இம்மாதம் கந்த சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹாரத்தன்று கந்தப்பெருமானை வழிபடுவதன் மூலம் வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 6,9-க்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது யோகத்தை வழங்குவார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். முடங்கிக் கிடந்த முன்னோர் வழிச் சொத்து கள், பஞ்சாயத்துகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுக்கு வந்து சேரப்போகிறது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசி அடிப்படையில் 10-ம் இடத்தில் இப்பொழுது குருவும், சுக்ரனும் இணைந்து இருக்கிறார்கள். எனவே, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பெண்களால் பெருமை சேரும். கடன்சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,22,23,30,31 நவம்பர்: 3,4,14,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தமாதம் பணத் தேவைகள் பூர்த்தியாகும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்கிக் குடியேற வேண்டுமென்ற உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்காக வாய்ப்பு உருவாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் சச்சரவுகள் ஏற்படாது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றவதில் சில தடைகள் ஏற்படலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். வெற்றிக்கு வித்திட பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் கார்த்திகை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

மனதில் பட்டதை மறைக்காமல் எடுத்துரைக்கும் கும்ப ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 9-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி யாகும். வசதிகள் பெருகும். உத்தியோகம், தொழிலில் நீங்கள் எடுத்த முயற்சிக்கு உன்னத பலன் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்று இதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். ஆனால் வரும் மாதத்தில் மகிழ்ச்சியடையும் விதத்தில் சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றது.

பழைய தொழிலில் சேர்த்த பங்குதாரர்களை விலக்கிவிட்டுப், புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துகளை புரிந்து கொண்டு உதவி செய்ய முன்வருவார்கள். உங்கள் ராசியைப் பார்க்கும் குரு, கொஞ்சம் வலிமையிழந்திருப்பதால் ஒரு சிலகாரியங்கள் உடனடியாக நிறை வேறாவிட்டாலும், 2-ம் முறையாகச் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

அதே நேரத்தில் அஷ்டமத்தில் 3 கிரகங்கள் இருக்கின்றன. 6-க்கு அதிபதியான சந்திரன், 4,9-க்கு அதிபதியான சுக்ரன், 3,10-க்கு அதிபதியான செவ்வாய் ஆகிய மூன்றும் மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கிறார்கள்.

அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல தல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் உருவாகும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் தடை சொல்லக்கூடும். உடன்பிறப்புகளின் பகை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணிபுரிந்தாலும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைப்பது அரிது.

செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். கந்த சஷ்டி விரதமிருந்து கந்தப்பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். குருபகவான் கொஞ்சம் வலிமை இழந்திருப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 5,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இதுவரை துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த அவர், அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். பஞ்சமாதிபதி 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துத் தகராறுகள் அகலும். பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வாயிலாகவும் உதிரி வருமானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்துசேரும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சுக்ர பெயர்ச்சிக் காலம்!

உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தற்சமயம் நீச்சத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சுக்ரன், உங்கள் சிந்தனைகள் அனைத்தையும் வெற்றி பெறச் செய்வார். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி சீராகும். வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை நிறை வேறும்.

இம்மாதம் ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபட்டு வருவது நல்லது. உங்கள் செயல்பாடுகளில் உள்ள தடை அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,21,25,26 நவம்பர்: 1,2,5,6,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்

மங்கையர்களுக்கான பலன்கள்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, குருவின் பார்வை பலத்தால் குழப்பங்கள் மாறும் மாதம் இது. கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அடுத்தவர் களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும். மனை கட்டிக் குடியேறும் வாய்ப்புக் கிடைத்து மகிழ்ச்சியை உருவாக்கும். உடன்பிறப்பு களால் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும். தாய் வழி ஆதரவு உண்டு. அனுமன் வழிபாடும், பெருமாள் – லட்சுமி வழிபாடும் ஆனந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

நேரம் காலம் பார்த்துச் செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் மீன ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு அஷ்டம ஸ்தானத்தில் வலிமையிழந்து சஞ்ச ரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமையிழந்த பொழுது நன்மையைச் செய்யும் என்பார்கள். அந்த அடிப்படையில் இம்மாதம் தொழில் முன்னேற்றமும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும்.

உத்தியோகத்தில் உடனிருக்கும் சகப் பணியாளர் களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எனவே குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நிவர்த்தியாகும். ஒருசிலர் உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்ல முயற்சி செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.

சப்தம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் வீற்றிருக்கிறார்கள். சுக்ரன் நீச்சம் பெற்றிருப்பது ஒரு வகைக்கு நன்மைதான். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கு ஏற்ப, விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகின்றது. குறிப்பாக வழக்குகள் சாதகமாகும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்குவதில், பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். திடீரென பகையான உறவினர்கள் இப்பொழுது நட்பாவார்கள்.

பூர்வீகச் சொத்துகளை விற்றதன் மூலம் நிலுவையில் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தைப் பார்க்கும்பொழுது, பஞ்சம ஸ்தானத்தில் ராகுபகவான் பலம் பெற்றிருக்கிறார். லாப ஸ்தானத்தில் கேது நிற்கிறார். ராகு, சந்திரன் வீட்டில் சஞ்சரிப்பதால் ஒருசில சமயங்களில் இனம்புரியாத கவலை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் திசை மாற்றமும் எற்படலாம். எனவே சர்ப்ப பிரீதி செய்து கொள்வது நல்லது. மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமான் வழிபாட்டையும், துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கந்தசஷ்டி நாளில் கந்தனைக் கை கூப்பித் தொழுது கவலைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் 8-ம் இடத்தில் புதன் சஞ்சரிக் கிறார். அக்டோபர் 28-ந் தேதி அவர், 9-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விருச்சிகத்திற்கு வரும்பொழுது உன்னதமான பலனைக் கொடுக்கும். குறிப்பாக ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகமாகவே வந்து சேரும். வாகன யோகம் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பங்காளிப் பகை மாறும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

மாதத்தொடக்கத்தில் நீச்சம்பெற்றுச் சஞ்சரித்து வந்த சுக்ரன், நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு வரப்போகிறார். துலாம் ராசி சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சுக்ரன், அஷ்டமத்திலேயே சஞ்சரிக்கும் பொழுது உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். இழப்புகளை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு வழி பிறக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பாதை புலப்படும். கூட்டாளிகள் விலகினாலும், கூடுதல் நன்மை கிடைக்க புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆரோக்கியத் தொல்லை மட்டும் உருவாகலாம். சிறு சிறு தொல்லை களால் அவதிப்பட நேரிடலாம். அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ள இயலும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, பவுர்ணமி விரதமிருப்பது உகந்தது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 22,23,28,29 நவம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு, நம்பிய காரியங்கள் தவறாது நடைபெறும் மாதம் இது. வீடு மாற்றங்கள் விரும்பிய படி நடைபெறும். அரசாங்கத் தேவைக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடுதவற்கான அறிகுறி தென்படும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். பிள்ளைகள் பிரியமாக நடந்துகொள்வர். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். உத்தியோக வாய்ப்புகள் கைகூடிவரும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். வியாழக்கிழமை தோறும் விரதமும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வேண்டிய வரங்களைக் கொடுக்கும்.

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: