Home Tamil Astrology Tamil Puthandu Palangal கன்னி: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கன்னி: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

0
877

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

இந்த வருடம் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பொது இடங்களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு லாப வீட்டில் இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மன உறுதி உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ல் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

14.4.18 முதல் 3.10.18 வரை குருபகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங் கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். 4.10.18 முதல் குரு 3-ம் இடத்தில் அமர்வதால், காரியங்களை முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். சில நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும், தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் சேரும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 4-ல் அமர்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் அதிகரிக்கும்.

22.3.19 முதல் 13.4.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆண்டு முழுவதும் சனிபகவான் 4-ல் தொடர் வதால், வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சொத்து வாங்கும்போது பத்திரங்களை உரிய சட்ட நிபுணரிடம் காட்டி, அவருடைய ஆலோச னையைப் பெறவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம், விலை உயர்ந்த நகைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 5-ல் இருப்பதால், கர்ப்பிணிகள் அடிக்கடி உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரியின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிப்பது நல்லது.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து, விற்பனையையும் லாபத்தையும் அதிகரிப்பீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள்.

மார்கழி, தை மாதங்களில் புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். பங்குதாரர்கள் கோபப்பட்டாலும், நீங்கள் பொறுமையாக அனுசரித்துச் செல்லுங்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள் வீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாகக் காணப்படும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தொலைநோக்குச் சிந்தனையால் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம் 

நாகை மாவட்டம், தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியை, அஷ்டமி திதிநாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; தீவினைகள் யாவும் நீங்கும்.

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: